பாராட்டு

*30 ஆண்டுகளாக பணியாற்றிவரும் தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனனுக்கு* 
*மிகை சிறப்பு நிலை ஆணை வழங்கி* 
*மாவட்டக்கல்வி அலுவலர் மு.அங்குலட்சுமி பாராட்டு*
&&&&&&
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியரக பணியாற்றி வரும் செ.நா.ஜனார்த்தனன் முப்பது ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றி வருவதால் மிகை சிறப்பு நிலை நன்னர் நிலை ஆணை வழங்கி மாவட்டக்கல்வி அலுவலர் இடைநிலைக்கல்வி மு.அங்குலட்சுமி பாராட்டினார்.
16.10.1992ல் முறையான பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தில் பணியமர்த்தப்பட்டு கடந்த 2002ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் பணி முடித்த அவருக்கு தேர்வுநிலை வழங்கப்பட்டது 2012ஆம் ஆண்டில் 20 ஆண்டுகள் பணி முடித்த நிலையில் சிறப்பு நிலை ஆணை வழங்கப்பட்டது.  தற்போது 16.10.2022ல் 30 ஆண்டுகள் பணி முடித்த நிலையில் அன்னருக்கு மிகை சிறப்பு நிலை என்னும் நன்னர் நிலை ஆணை வழங்கப்பட்டுள்ளது. 
அரசாணை எண் : 562 நிதி நாள் ( ஊதியக்குழு ) நாள் : 28-07-1996 , அரசாணை 303 நிதித்துறை நாள் 11.10.2017 மற்றும் அரசாணை எண்.151 பள்ளிக்கல்வித்துறை நாள் 09.09.2022ன்படி . வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியரக பணியாற்றி வரும் செ.நா.ஜனார்த்தனன் 30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணிமுடித்துள்ளதால் இவருக்கு சிறப்பு நிலையில் 10 ஆண்டுகள் பணி முடித்துள்ளமைக்காகவும் ஒரு போனஸ் ஊதிய உயர்வு வழங்கி ஊதிய நிர்ணயம் பின்வருமாறு அனுமதித்து வேலூர் மாவட்டக்கல்வி அலுவலர் இடைநிலைக்கல்வி மு.அங்குலட்சுமி ஆணையிட்டுள்ளார். 
மாவட்டக்கல்வி அலுவலர் இடைநிலைக்கல்வி மு.அங்குலட்சுமி, தலைமையாசிரியை கோ.சரளா, உதவித்தலைமையாசிரியர் எம்.மாரிமுத்து, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கோ.பழனி, எஸ்.சிவவடிவு கண்காணிப்பாளர் சீனிவாசன், தாமோதரன் ஜுனியர் ரெட்கிராஸ் உள்ளிட்டோர் பாராட்டினர்.

&&&&&&&&தொழிற்கல்வி ஆசிரியரக பணியாற்றி வரும் செ.நா.ஜனார்த்தனன் முப்பது ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றி வருவதால் மாவட்டக்கல்வி அலுவலர் இடைநிலைக்கல்வி மு.அங்குலட்சுமி மிகை சிறப்பு நிலை ஆணை வழங்கி பாராட்டிய போது எடுத்தப்படம் உடன் தலைமையாசிரியர் கோ.பழனி, கண்காணிப்பாளர் சீனிவாசன், தாமோதரன், க.குணசேகரன் உள்ளிட்டோர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்