கைது
காரில் வந்து மொபைல் போன்
திருடிய 4 பேர் கைது
வேலுார், ஏப். 6–
காரில் வந்து மொபைல் போன் திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார், காட்பாடி, சத்துவாச்சாரி பகுதியில் மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்டு, காய்கறி மார்க்கட் பகுதியில் மொபைல் போன்கள் திருட்டு அதிகம் நடந்து வந்தது. குற்றவாளிகளை பிடிக்க காட்பாடி போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (4) மாலை 4:00 மணிக்கு காட்பாடி சித்துார் பஸ் ஸ்டாண்டில் கார் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.
சந்தேகத்தின் பேரில் காரை மடக்கி அதிலிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், ஆந்திரா மாநிலம், கோதாவரி மாவட்டம், அக்கிவேடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், 22, மோகன், 25, பாலாஜி, 20, டேவிட், 35, என்பதும், இவர்கள் தினமும் காலை 8:00 மணிக்கு காரில் வேலுாருக்கு வந்து கூட்ட நெரிசல் உள்ள பகுதிக்கு சென்று மக்களிடமிருந்து மொபைல் போன்களை திருடிக்கொண்டு இரவு 9:00 மணிக்கு ஆந்திரா மாநிலம், சித்துாருக்கு சென்று ஓட்டலில் தங்கி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.
போலீசார் அவர்களை கைது செய்து, காருடன் சேர்த்து 14 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
Comments
Post a Comment