கைது

காட்பாடியில் நடந்து சென்றவரிடம்
 செல்போன் பறித்த
ஆந்திராவைச் சேர்ந்த 4பேர் கைது
9 செல்போன்கள், கார் பறிமுதல்
காட்பாடியில் நடந்த சென்ற வருடம் செல்போன் பறித்துக் கொண்டு தப்பியோடிய கும்பலை போல போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர் அவர்களிடம் இருந்து 9 செல்போன்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்த காரை பறிமுதல் செய்தனர் இந்த சம்பவம் பற்றி போலீஸ் அரசியல் கூறப்படுவதாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த திருத்தணி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் வயது 54 இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது காரில் வந்த நான்கு பேர் அவர் சட்டை பையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர் இது குறித்து சீனிவாசன் காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் உடனே குடியாத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்த காரை துரத்தி பிடித்து மடக்கினர் காரில் இருந்தவரிடம் விசாரித்த போது அவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
 அவர்கள் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி ஆக்சிவேடு கிராமத்தைச் சேர்ந்த நக்கா வெங்கடேஷ் (வயது 22 ), மேகல் சாய் (25), மேற்கு கோதாவரி சின் சலபேட்டை கிராமத்தைச் சேர்ந்த பன்னசு பாலாஜி ( 20), செரி குள்ளமறி கிராமத்தைச் சேர்ந்த கம்பம் டேவிட் (35) ஆகியோர் என தெரியவந்தது அவளிடம் போலீசார் நடத்தி விசாரணையில் அவர்கள் பல இடங்களில் செல்போன் திருடியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 9 செல்போன்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய கார் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள நான்கு பேரும் சேர்ந்து எந்தெந்த இடங்களில் செல்போன்களை பறித்தனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்