கைது

அமைச்சர் துரைமுருகனை
சமூக வலைதளத்தில் தவறாக
சித்தரித்த அ.தி.மு.க., பிரமுகர்
கைது


வேலுார், ஏப். 6–
அமைச்சர் துரைமுருகனை சமூக வலைதளத்தில் தவறாக சித்தரித்த அ.தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது  செய்தனர்.
நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  கடந்த மாதம் 29 ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசும் போது,  தன்னுடைய மரணத்திற்கு பிறகு புதை குழியில் இங்கே கோபாலபுரத்து விசுவாசி உறங்குகிறான் என எழுதினால் போதும் என உருக்கமாக பேசினார். இதை சிலர் அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்தை ஒரு கல்லறையில் உள்ளது போன சித்தரித்து சில வாசகங்களையும் குறிப்பிட்டு, அதனுடன் ஆடியோவை இணைத்து வீடியோவாக சமூக வலைதளத்தில்  பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு வதந்தி பரப்பி பிரச்சனையை ஏற்படுத்தும் முகநுால் பதிவை சமூக வலைதலங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வேலுார் மாவட்டம், காட்பாடி  வடக்கு பகுதி தி.மு.க., செயலாளர் வன்னியராஜா காட்பாடி போலீசில் கடந்த 1ம் தேதி புகார் செய்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு பொள்ளாச்சி 20 வது அணி  செயலாளர்  அருண்குமார் என்பவர் அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிறக்கம் செய்து தவறாக சித்தரித்து ஆடியோவை இணைத்து வீடியோவாக பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. காட்பாடி போலீசார் அவரிடம் நடத்திய விசாரணயைில், தவறாக பதிவேற்றம் செய்ததை ஒத்துக்கொண்டார். இதையடுத்து காட்பாடி போலீசார்
இன்று இரவு அருண்குமாரை கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.  மேலும் அமைச்சர் துரைமுருகன் குறித்து தவறான பதிவேற்றங்களை முகநுால் பக்கத்தில் இருந்து நீக்க நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காட்பாடி போலீசார் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்