கைது
வன விலங்குகளை
வேட்டையாட
முயன்றவர் கைது
ஆம்பூர், ஏப். 6–
ஆம்பூர் அருகே, வன விலங்குகளை வேட்டையாட முயன்றவரை துப்பாக்கியுடன் வனத்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் வனத்துறையினர் இன்று காலை நாயக்கனேரி காப்புக்காட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அதில், மூணுகல் மலையில் சென்ற போது, வாலிபர் ஒருவர் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றிக்கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பனங்காட்டேரி பகுதியை சேர்ந்த திருப்பதி, 23, என்பதும், வன விலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. ஆம்பூர் வனத்துறையினர் அவரை கைது செய்து நாட்டு துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்தனர்.
Comments
Post a Comment