உறுதி மொழி
*போதைப் பொருளற்ற தமிழ்நாடு*
முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிமொழி தலைமையில்
*பெருந்திரள் போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல்*
*****
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் அவர்களின் ஆணையின் படி பெருந்திரள் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிமொழி அவர்கள் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர் இடைநிலை கல்வி மு. அங்கு லட்சுமி, அவர்கள் முன்னிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் எல் ஜெய்சங்கர், கே. கோபாலகிருஷ்ணன் நேர்முக எழுத்தர் எஸ்.தமிழ்ச்செல்வி, தலைமை ஆசிரியர்கள் லதா, கோ. பழனி ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா. ஜனார்த்தனன் அலுவலக பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்றது
போதைப் பொருள் பயன்பாடு அற்ற தமிழ்நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.
Comments
Post a Comment