பலி
2 குழந்தைகளை கொன்ற
தாயும் சாவு
ஆம்பூர், ஏப். 6–
ஆம்பூரில், இரண்டு குழந்தைகளை கொன்ற தாயும் இறந்தார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜமுனா, 35. இவரது கணவர் மகேஷ்குமார், 40. இவர்களுக்கு யாசிகா, 6, யாதிகா, 2, ஆகிய மகள்கள் இருந்தனர். குடும்ப பிரச்சனையால் மகேஷ்குமார் மனைவியை விட்டு பிரிந்து கர்நாடகா மாநிலம், மைசூருக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ஜமுனா கடந்த 3 ம் தேதி மாலை இரண்டு பெண் குழந்தைகளுக்கு குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்து அவர்கள் மயங்கி விழுந்த போது கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, அவரும் விஷம் குடித்தார். வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜமுனா இன்று மதியம் 2:00 மணிக்கு இறந்தார். ஆம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Comments
Post a Comment