சஸ்பெண்ட்
பட்டாவில் முறைகேடு செய்த
வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
வேலுார், ஏப். 7–
பட்டாவில் முறைகேடு செய்த பி.கே. புரம் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வேலுார் மாவட்டம், கே.வி. குப்பம் அருகே செண்ணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், 48. இவர் பி.கே. புரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் அரசுக்கு சொந்தமான கிராமப்புறங்களில் உள்ள நிலங்கள், பாதைகள் மற்றும் தனியார் நிலங்களை உரிய ஆவணங்கள் இன்றி விரும்பும் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொடுப்பதும், அதற்கு மதிப்பிற்கு தக்கபடி லஞ்சம் வாங்கிக் கொள்வதாக புகார்கள் வந்தன.
மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நடத்திய விசாரணையில், சங்கர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து சப் கலெக்டர் வெங்கட்ராமன் இன்று உத்தரவிட்டார்.
Comments
Post a Comment