பேட்டி
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு
தனி நிநி நிலை அறிக்கையை
தமிழக அரசு வெளியிட வேண்டும்
இ. கு. கட்சி தலைவர் தமிழரசன்
குடியாத்தம், ஏப். 6–
பட்ஜெட் கூட்டத்தொடரில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தனி நிநி நிலை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு. தமிழரசன் கூறினார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில் தமிழரசன் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: பட்ஜெட் கூட்டத்தொடரில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தனி நிநி நிலை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். கல்வித்துறையில் பொதுப்பள்ளிகளுடன் ஆதிதிராவிட பள்ளிகள் இணைக்கும் திட்டத்தை கை விட வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
புத்த பூர்ணிமாவுக்கு மத்திய, மாநில அரசுகள் விடுமுறை அறிவிக்க வேண்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மதமாற்ற சட்டத்தை கட்டாயமாக அமல்படுத்தி சிறுபான்மையின மக்களை நசுக்குகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட தலைவர் தலித்குமார், செயலாளர் அசோக்குமார் உடனிருந்தனர்.
Comments
Post a Comment