கைது
தண்ணிப்பாம்பை வாயால்
கடித்து கொன்று துப்பிய
3 பேர் கைது
அரக்கோணம், ஏப். 6–
அரக்கோணம் அருகே, தண்ணிப்பாம்பை வாயால் கடித்து கொன்று துப்பிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே சின்ன கைனுார் கிராமத்தை சேர்ந்தவர்கள் மோகன், 33, சூர்யா, 21, சந்தோஷ், 21. விவசாய கூலி தொழிலாளர்கள். இவர்கள் மூன்று பேரும் நேற்று முன்தினம் (4)ல் காலை 8:00 மணிக்கு சின்ன கைனுார் ஏரிக்கரையோரம் சுற்றிக்கொண்டிந்த தண்ணிப்பாம்பை பிடித்தனர்.
பின் அதை மூவரும் கைகளால் ஒன்றாக பிடித்து வாயால் கடித்து கொன்று துப்பினர். இந்த காட்சி வீடியோவாக சமூக வளைதலங்களில் வைரலாக பரவியது. ஆற்காடு வனச்சரக அலவலர் சரவவணபாபு விசாரணை நடத்தி மூவரையும் நேற்று ( 5) கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments
Post a Comment