புகார்

மரம் வெட்டி கடத்தியவர்கள்
மீது நடவடிக்கை எடுக்கக்கோரி
திமுக பிரமுகர் புகார்


வேலுார், ஆக 11–
வேலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமை வகித்தார்.
அப்போது வேலுார் சத்துவாச்சாரி பேஸ் 3 பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் வள்ளலார் ரமேஷ் என்பவர் கொடுத்த மனுவில், சத்துவாச்சாரி பேஸ் 3 பிஎப்., அலுவலகம் செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான ரூ 1 லட்சம்  மதிப்பிலான மரங்களை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மர்ம நபர்கள் வெட்டி  கடத்தியுள்ளனர்.
இது குறித்து  அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல், நெடுஞ்சாலை, வீட்டு வசதி வாரியம் என மாறி, மாறி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  
இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது போல பொது மக்கள் தரப்பில் 22 மனுக்கள் கொடுக்கப்பட்டது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., மணிவண்ணன் உத்தரவிட்டார். கூடுதல்  காவல்  துறை கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், கெளதமன் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்