தரிசனம்
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக வேலூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., 2 ஆண்டுகள் பதவி வகித்தார்.
அவரின் பதவி காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. பதவி கடைசி நாளில் வேலூர் அடுத்த வெட்டுவாணத்தில் உள்ள திருநங்கைகளை வேலூரில் இருந்து வேன் மூலம் திருமலைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை ஏழுமலையானை தரிசிக்க வைத்து மீண்டும் அழைத்து வந்து வேலூரில் இறக்கி விட்டனர்.
இதுகுறித்து ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., கூறியதாவது;
*பக்தர்களுக்கு சேவை*
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதவி ஏற்று கொண்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு சேவையாற்றி உள்ளேன். அறங்காவலர் குழு உறுப்பினராக என்னுடைய பதவி காலத்தில் வேலூர் மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் 12 பக்தர்களை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் என்னுடைய சொந்தவேன் மூலம் திருமலைக்கு அழைத்து சென்றேன்.
*ஏழுமலையான் தரிசனம்* அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வைத்து மீண்டும் வேலூர் கொண்டு வந்து விடப்பட்டனர். அவர்கள் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டு வந்து விடுவது வரை அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வைக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பெருமாளுக்கு சேவை செய்ததை பாக்கியமாக கருதுகிறேன். நான் செய்த இந்த சேவை எனக்கு மன நிறைவை தருகிறது. நேற்று முன் தினத்துடன் எனது பதவி காலம் முடிவடைந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment