நடுக்கல்
15 ம் நுாற்றாண்டை சேர்ந்த
நடுக்கல் கண்டெடுப்பு
திருப்பத்துார்,
திருப்பத்துார் அருகே, 15 ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுக்கல் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரி பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்துார் அருகே புதுப்பேட்டை காட்டூர் ஏரி கால்வாயை நாட்டு நலப்பணிகள் திட்டத்தில், கல்லுாரி மணவர்கள் சுத்தம் செய்தனர். அதில் நடுக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதை ஆய்வு செய்ததில், 15 ம் நுாற்றாண்டை சேர்ந்த விஜய நகர காலத்து நடுக்கல் என்பதும்,. 4 அடி உயரமும். 2 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் அமைக்கப்பட்ட நடுக்கல்லில், இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் வைத்துள்ள வீரனின் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
போரில் வீர மரணம் அடைந்த வீரினின் ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக இந்த நடுக்கல் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment