பலி

வாணியம்பாடியில் பன்றி காய்ச்சல்
பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு. பகுதி மக்கள் அச்சம்.

வாணியம்பாடி, செப்.3- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார்(59). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு நுரையீரல் பிரச்சனை காரணமாக  உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று விடிற் காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பன்றி காய்ச்சல்
பாதிக்கப்பட்டதாக இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அவர் வசித்து வந்த வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் துய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர் நடத்தி வந்த கடையை ஐந்து நாட்களுக்கு தொடர்ந்த மூட நகராட்சி ஆணையாளர் சதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

வாணியம்பாடியில் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஒருவர் உயர்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்