பரிசு
ராணிப்பேட்டைமாவட்டம் 4-9-23
தேசிய் அளவில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட கிக்பாக்ஸிங் வீரர் வீராங்கனைகள் 9 தங்கம்,6 வெள்ளி ,5 வெங்கலம் வென்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் காஞ்சியில் உள்ள ஹரி வாஞ்ச் தானாபகத் உள்விளையாட்டு அரங்கில் வாக்கோ இந்தியா சார்பில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான தேசிய அளவிலான கிக் பாஸ் போட்டி கடந்த 23ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் 32 மாநிலங்களில் இருந்து ரெண்டாயிரத்துக்கு மேற்பட்ட கிக் பாக்ஸின் வீரர்கள் பங்கேற்றனர் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்ற போட்டியில் தமிழகத்தில் இருந்து 183 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் வெற்றிப் பெற்றனர்.இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கிக்பாக்ஸிங் சார்பில் மாவட்ட கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் மோகன்ராஜ் தலைமையில் 15 வீரர் வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டு 9 தங்க பதக்கமும் ,6 வெள்ளி பதக்கமும்,5 வெண்கல பதக்கமும் வெற்றி பெற்றனர்.இதனை தொடர்ந்து பயிற்சியாளர் மோகன்ராஜ் தலைமையில் 15 வீரர் வீராங்கனைகள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செய்து தங்கம், வெள்ளி, பதக்கங்களை காண்பித்து ஆசிப் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களை எம்எல்ஏ அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள். அப்போது கிக் பாக்ஸிங் வெற்றி பெற்ற மாணவர்கள் சர்வதேச போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்
Comments
Post a Comment