விழா

ராணிப்பேட்டைமாவட்டம்  


ஆற்காடு நகராட்சியில் 9.48 கோடி மதிப்பிலான புதிய பேருந்து நிலையம் மற்றும் காய்கனி அங்காடி கட்டுமான பணிகளை தமிழக கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் உட்கட்டமைப்பு விரிவாக்க திட்டத்தில் 6 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையமும், கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3.48 கோடி மதிப்பீட்டில் புதிய காய்கனி அங்காடி கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இந்தப் பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார். பூமி பூஜைக்காக வருகை தந்த அமைச்சருக்கு நிர்வாகிகளும் நகராட்சி பிரதிநிதிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்க பிரதிநிதிகள் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்