திருட்டு

வேலூர்   3-9-23
 

 தொரப்பாடியில் ஆசிரியர் வீட்டின் பின் பக்க கதவை  உடைத்து 100 சவரன் தங்க நகை கொள்ளை - மிளகாய் பொடி தூவி சென்ற ஆந்திர கொள்ளை கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை

    வேலூர்மாவட்டம்., தொரப்பாடி ராம் சேட் நகர் 1 ஆவது தெருவில்   வசித்து வருபவர் பாலாஜி இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இவரின்  மனைவி மோகனப்பிரியா   மூஞ்சூர் பட்டு பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார் இன்று காலை அவர் மூஞ்சூர் பட்டு பகுதியிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மாலை  வீடு திரும்பிய போது வீட்டின் பின் பக்க கதவு    உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்  பீரோவில் வைக்கப்பட்டிருந்த மோகனபிரியாவின் தங்கநகை 20 சவரனும் அவர் மாமியார் நகை 80 சவரன் என மொத்தம்  100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்து கொண்டு அதனை திசை திருப்ப கொள்ளையர்கள் வீட்டில் மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றது  கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பாகாயம் போலீசருக்கு தகவல் அளித்தார்

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தியதுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கைரேகை நிபுணர்களும் வீட்டில் தடவியல் சோதனை செய்து வருகின்றனர் 
   இந்த கொள்ளையில் ஆந்திராவை சேர்ந்த கொள்ளை கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது சிறைத்துறை டி.ஐஜி அலுவலக்ம் எதிரில் உள்ள தெருவில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்