உதவி
வேலூர் மாவட்டம் லத்தேரியை சேர்ந்த மாணவி ஜெயபிரியா +2 வரை அரசு பள்ளியில் பயின்று தற்போது குடியாத்தத்தில் உள்ள அரசு கல்லூரியில் BA பயின்று வருகிறார்.
சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வமுடன் இருந்த மாணவி தற்போது மாநில அளவில் நடந்த தரைப்பந்து(floor ball) போட்டியில் வென்று தேசிய அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
தேசிய அளவில் விளையாட நாக்பூர் செல்ல வேண்டும் என்பதால் அதற்கு தேவையான பயண கட்டணம் 3000 மாணவியிடம் நேரில் வழங்கினேன்.
ஏற்கனவே அம்மா நகைகளை அடகு வைத்து மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு இந்த அளவுக்கு முன்னேறியுள்ள மாணவியின் தாய் தந்தை 100 நாள் வேலை செய்பவர்கள்.
ஏழ்மை சூழலிலும் சாதிக்க துடிக்கும் மாணவிக்கு வாழ்த்துக்கள்..!
- Dinesh Saravanan
Comments
Post a Comment