கைது
ராணிப்பேட்டைமாவட்டம் வேலூர் 4-9-23
வாலாஜா அருகே ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சாமியாரை அப்பகுதியினர் ஆபாச அர்ச்சனை செய்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காகிதக்கார தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் இவர் அதே பகுதியில் பஜனை கோவில் வைத்துக்கொண்டு சாமியார் காவி உடை அணிந்து பெட்டிக்கடை நடத்தி வருகிறார்..
இந்த நிலையில் இன்று மாலை அதே பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ஜோதி என்பவரின் 9 வயது சிறுமி வீட்டிற்கு மேகி வாங்குவதற்காக கடைக்கு வந்தபோது சாமியார் சிவலிங்கம் அந்த சிறுமியை கடைக்கு உள்ளே அழைத்து சென்று உடையை கலைத்து பாலியல் சீண்டலில் சாமியார் ஈடுபட்டதாக தெரிகிறது..
இதுகுறித்து உடனே, சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாமியார் வேடமணிந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அவரை கூடியிருந்த பொதுமக்கள் ஆபாசமாக அர்ச்சனை செய்ததோடு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் பின்னர் போலீசார் நடைபெற்ற சம்பவம் குறித்து சாமியாரிடம் சிவலிங்கத்திடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
அதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியிடம் பாலியல் செய்தலில் ஈடுபட்ட சாமியார் சிவலிங்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்..
Comments
Post a Comment