சண்டை

வேலூர்   1-9-23

 பேரணாம்பட்டில்மூன்று மசூதிகள் ஒரு மதரஸாவுக்கு முத்தவல்லி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் இருதரப்பினருக்கு வாக்குவாதம்





       வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் மூன்று பள்ளிவாசல் ஒரு மதரசாவிற்கான முத்தவல்லி மற்றும் நிர்வாகிகளுக்கா வக்பு வாரியம் சார்பாக நடத்தப்படும் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.அப்பொழுது இரு தரப்பினருக்கு வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இந்த பள்ளிவாசல்களுக்கு நூறாண்டுகளுக்கு மேலாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வாகித்து வருகிறார்கள்அதனை மாற்ற வேண்டும் என்று ஒரு தரப்பும் மாற்றக்கூடாது என்று இன்னொரு தரப்பும் வக்பு வாரியத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்வக்பு வாரிய அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின் பெயர் தேர்தல் நடைபெறும் என்றும் அதற்கான வேட்பு மனுவை இரு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்டனஒரு தரப்பினர் இந்தப் பள்ளிவாசல்களுக்கும் மதரஸாவிற்கும் சுற்றி 4000 பேர் இருப்பதாகவும் அவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.ஆனால் வக்புவாரியம் வெறும் 800 பேர் வாக்குரிமை பெற்று இருக்கிறார் என்று தெரிவிக்கின்றனர்இதனை அரசியல் தலையிட்டு காரணமாக வகபு வாரியம் செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் ஒரு தரப்பினர்.
இதனால் அப்பகுதியில் இஸ்லாமியர்கள் இடையே பதட்டமான சூழல் ஏற்பட்டது.பின்னர் மாலை 5 மணி வரையும் நடந்த வேட்பு மனு தாக்கலின்  போது நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மனு தாக்கல் செய்தனர்.மசூதிகளில் உள்ள பொறுப்பாளர் தேர்வுக்கு மனு  தாக்கல்லின் இப்போது மசூதியில் இஸ்லாமியர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்