பலி
திருப்பத்தூர்மாவட்டம் 4-9-23
வாணியம்பாடி அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஷா என்பவரின் 16 வயது மகன் சிறுவன் அசார் இவர் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருந்துள்ளார்.இந்நிலையில் சிறுவன் அசார் குடும்பத்தினருடன் தும்பேரி ஊராட்சி நாதிகுப்பம் பகுதியில் உறவினர் சையத் பாஷா என்பவரின் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். திருமண வீட்டில் போடப்பட்டிருந்த பந்தல் அருகே விளையாடி கொண்டிருந்த போது அங்குள்ள இரும்பு கம்பத்தை பிடிக்கும் போது இரும்பு கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து மயங்கிய சிறுவனை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து பரிசோதனை செய்த போது சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பலூர் போலிசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற போது திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
Comments
Post a Comment