விழா
வேலூர் 4-9-23
மது அருந்துபவர்களுடன் நட்பு வைத்துகொள்ளாதீர்கள் சிகரெட் புகைப்பவர்கள் அருகில் கூட செல்லாதீர்கள் - ஒழுக்கமாக இருங்கள் - மாநில அளவிலான கராத்தேபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கோப்பைகள் சான்றுகளை வழங்கி முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வேலூரில் பேச்சு
__________________________________
வேலூர்மாவட்டம்,வேலூரில் ஜப்பான் ஷீட்டோ கராத்தே இந்திய பள்ளியின் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது போட்டியினை இந்திய தலைமை கராத்தே மாஸ்டர் ரமேஷ் துவங்கி வைத்தார் இதில் 600-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர் அவர்களுக்கு பரிசுகளையும் கோப்பைகளையும் திரைப்பட முன்னணி சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வழங்கினார் இதில் கராத்தே மாஸ்டர் விக்கி லச்சு,உள்ளிட்டோர் திரளான மாணவ,மாணவிகளும் பெற்றோர்களும் பங்கேற்றனர் இதில் கராத்தேவில் சிறப்பாக பயின்று கற்ற மாணவ,மாணவிகளுக்கு பிளாக் பெல்ட்டுகளையும் வழங்கினார்கள் நூறு சிறந்த வீரர்களுக்கு கருப்பு பெல்ட் வழங்கப்பட்டது இதில் தென்னிந்திய தலைமை மாஸ்டர் லச்சு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் இதில் திரளான மாணவ,மாணவிகளும் பெற்றோர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர் மேலும் கட்டா மற்றும் தற்காப்பு, தற்காப்பு சண்டையிடுதல் போன்ற பல சாகசங்களையும் கராத்தே வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்று செய்து காட்டி அசத்தியதுடன் கோப்பைகளையும் பரிசுகளையும் தட்டி சென்றனர் இந்த விழாவில் 7 ஆவ முறையாக சண்டை பயிற்சி வல்லுநர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்திற்கு கருப்பு பெல்ட் வழங்கப்பட்டது
இவ்விழாவில் முன்னணி திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் பேசுகையில் மாணவர்களாகிய நீங்கள் தினந்தோறும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும் அதுமட்டும் போதாது ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் அப்போது தான் ஆரோக்கியமாக இருக்க முடியும் மது அருந்துபவர்களுடன் நட்பு வைத்துகொள்ளாதீர்கள் புகைபிடிப்பவர்கள் அருகில் கூட செல்ல கூடாது தீய பழக்கங்களில் சிக்க கூடாது தாய் தந்தையை தெய்வமாக போற்றுங்கள் என பேசினார்
Comments
Post a Comment