VITவிழா
வேலூர் 1-9-23
நிலவை போல் மற்ற கிரகங்களையும் ஆராய்ச்சி செய்ய நேரடியாக அந்தந்த கிரகங்களுக்கு செல்லும் வகையில் ராக்கெட்மூலம் செல்லும் ரோவர்களை வடிவமைத்து மற்ற கிரகங்களையும் ஆராய்ச்சி செய்யவுள்ளோம் - பி.எஸ்.எல்.வி லேண்டர் மற்றும் ரோவர் 14 நாட்கள் நிலவில் சூரிய ஒளி கிடைப்பதன் மூலம் தொடர்ந்து இயங்கி வருகிறது அதன் பிறகு மீண்டும் நிலவில் சூரிய ஒளி கிடைத்தால் ஆராய்ச்சிகள் தொடர சாத்திய கூறுகள் உள்ளதா என முயற்சி செய்வோம் - நிலவுக்கு ஆட்களை அனுப்பும் திட்டம் தற்போதைக்கு இல்லை - அவ்வாறு ஆட்களை அனுப்பினால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனுப்பும் சாத்தியகூறுகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம் இஸ்ரோ சந்திரயான் -3 இயக்குநர் மோகனகுமார் பேச்சு
_____________________________________________
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர்தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் வேந்தர் விசுவநாதன் தலைமையில் சந்திராயன் -3 வெற்றிகுறித்து அதன் இயக்குநர் மோகனகுமார் மாணவர்களுக்கு விளக்கி கூறும் நிகழ்வும் கலந்துரையாடலும் நடந்தது இதில் இஸ்ரோ சந்திராயன் -3 இயக்குநர் விஞ்ஞானியுமான மோகனகுமார் பேசுகையில் சந்திராயன் மூன்று வெற்றி என்பது நமது மண்ணுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது ஜூலை மாதம் சந்திராயன் மூன்று விண்ணில் ஏவப்பட்டது ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் லேண்டெர்இறங்கியது இவை பொண்ணு எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய வரலாற்று சாதனையாகும் சந்திராயன் மூன்று ஆர்பிட்டர் லேண்டர் ரோவர் வெற்றிகரமாக சென்று இறங்கியது மேலும் சந்திராயன் மூன்று நிலவின் தட்பவெப்ப நிலை இயல்பு நிலைகள் வாயுக்கள் கனிமங்கள் குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது சந்திராயன் மூன்று முழுவதும் நமது நாட்டு தயாரிப்பு இதற்காக பல்வேறு தொழிற்சாலைகள் வேதியல் தொழிற்சாலைகள் பெரிய பெரிய தொழிற்சாலை நிறுவனங்கள் ஆகியவைகள் ஒத்துழைப்பு அளித்து பல்வேறு உபகரணங்களை அளித்தனர் மேலும் பலரின் ஒத்துழைப்பு காரணமாகவே இது வெற்றி பெற்றுள்ளது தொழில்நுட்ப வல்லுநர்கள் பொறியாளர்கள் தொழில்நுட்ப உதவியாளர்கள் சந்திராயன் மூன்று ஒவ்வொரு உதிரி பாகங்களையும் இயந்திரங்களையும் பல கட்ட ஆய்வுக்குப் பின்னரே பொருத்தினோம் சந்திராயன் மூன்று தற்போது நிலவில் உள்ள லேண்டெர் மற்றும் ரோவர் தென் துருவத்தை ஆராய்ந்து வருகிறது அங்கு 14 நாட்கள் மட்டுமே சூரிய வெளிச்சம் இருக்கும் லேன்டர் மற்றும் ரோவர் கருவிகள் அந்த சூரிய வெளிச்சம் மூலம் சோலார் பேனலால் பேட்டரிக்கு ஆற்றல் பெற்று இயங்கி வருகிறது அதன் பிறகு கருவிகள் தானாக ஆப் ஆகிவிடும் மீண்டும் அங்கு சூரிய ஒளி கிடைத்தால் இக்கருவிகளை இயக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என முயற்சிப்போம் தற்போது தொடர்ந்து நிலவிலிருந்து பல்வேறு தகவல்களை சந்திராயன் மூன்று அனுப்பி வருகிறது பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது நிலவுக்கு மனிதர்கள் அனுப்பும் திட்டம் என்பது இந்தியாவிடம் தற்போது இல்லை ஆனால் தொடர்ந்து சந்திராயன் மூன்று போன்ற விண்வெளி ராக்கி கட்டுகள் மூலம் ஆராய்ச்சிகள் தொடர்வோம் நாம் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதாக இருந்தால் அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் அதற்காக அவர்கள் விண்ணில் செல்லும் போது ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அவர்கள் எந்தவித சேதமும் இன்றி தப்பிக்கும் வகையில் புதிய வகையான ஏர் கிராப்டுகளை வடிவமைக்க உள்ளோம் சந்திராயன் மூன்று போல் பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம் அவர்கள் குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் மேலும் நிலவைப் போல் மற்ற கிரகங்களையும் ஆராய்ச்சி செய்ய என்னென்ன தொழில்நுட்பங்கள் வேண்டும் அதற்காக என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறோம் என்று பேசினார்
Comments
Post a Comment