சக்தி

ராணிப்பேட்டைமாவட்டம்    வேலூர்   3-1-24
 
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களை ஒன்றிய மேற்பார்வையாளர் அதிகார தோணியில் தரை குறைவாக பேசியதாக தெரிவித்து பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர்

 

ராணிப்பேட்டை மாவட்டம்ஆற்காடு அடுத்த புதுப்பாடி ஊராட்சி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சுமார் 70 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்இந்த நிலையில் இன்று வழக்கம் போல பணிக்கு சென்று வேலையை செய்து கொண்டிருந்தபோது ஒன்றிய மேற்பார்வையாளர் கௌரி அதிகார தொனியில் பணியாளர்களை தரை குறைவாக ஒறுமையில் பேசியதாக தெரிவித்து பணியாளர்கள் புதுப்பாடி பேருந்து நிலையத்தில் ஆற்காடு செய்யார் செல்லும் சாலையை மரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர்

இந்த தகவலை அறிந்து கொண்ட ஆற்காடு கிராமிய காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த 100 நாள் வேலை திட்டத்தின் பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை கைவிட செய்தனர்

மேலும் பணியாளர்கள் தெரிவித்திருக்கும் புகார் குறித்து ஒன்றிய மேற்பார்வையாளர் கௌரியிடம் விசாரிக்க இருப்பதாக ஆற்காடு பி,டி,ஒ தெரிவித்துள்ளார்

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்