தொடக்க விழா
வேலூர் 24-1-24
மேல் அரசம்பட்டு கிராமத்திலிருந்து சென்னைக்கு புதிய அரசு பேருந்தினை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் துவங்கி வைத்தனர்- மாதனூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழக முதல்வர் மதுரையில் துவங்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதான விழாவினை நேரடியாக மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்களும் மாணவர்களுடன் பார்த்தனர்
_________________________________________________________
வேலூர்மாவட்டம்,அனைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள மலை கிராமமான மேல் அரசம்பட்டு கிராமத்திலிருந்து சென்னைக்கு நேரடியாக செல்ல பேருந்துகள் இல்ல இதனை போக்குவகையில் இன்று மேல் அரசம்பட்டிலிருந்து சென்னைக்கு அரசு பேருந்து சேவையினை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்ததுடன் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மேல் அரசம்பட்டிலிருந்து ஒடுக்கத்தூர் வரையில் பேருந்தினை அவர் ஓட்டிவந்தார்
பின்னர் மாதனூரில் உள்ள எம்.ஜி.ஆர் கலை அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகளுடன் மதுரையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலைஞர் ஏறுதழுவுதல் மைதானம் திறக்கும் நிகழ்வை நேரலையில் பார்த்தனர் இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர்கள் வில்வநாதன் நந்தகுமார்,வேலூர் மேயர் சுஜாதா மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு வருவாய் கோட்டாச்சியர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Comments
Post a Comment