வழிபாடு
ராணிப்பேட்டைமாவட்டம் வேலூர் 25-1-24
சோளிங்கரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைபூசம் முருகருக்கு சிறப்பு அபிஷேகம் - வாலாஜா முருகர் கோவிலில் பால் குடம் எடுத்து வழிபாடு
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் தை பூசம் முன்னிட்டு மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமிக்கு பால் தயிர் தேன் சந்தனம் திருநீரு இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்மாலை பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது.இதில் நெமிலி, பானாவரம், சோளிங்கர், மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனுக்காக சேவலை கோவிலில் விட்டனர்.5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
இதே போன்று வாலாஜாவில் பேருந்து நிலையத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது ராணிப்பேட்டைமாவட்டம்
வேலூர் 25-1-24
ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பாலமுருகருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து தங்கத்தேர் இழுத்து பக்தர்கள் வழிபாடு
___________________________________________________
ராணிப்பேட்டைமாவட்டம்,ரத்தினகிரியில் உள்ள புகழ்பெற்ற பாலமுருகன் திருகோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு பாலமுருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது பின்னர் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் முருகனை வைத்து மேள்தாளங்கள் முழங்க ஆலய உட்பிரகார உலாவும் சுவாமி வந்தது பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இவ்விழாவில் பாலமுருகனடிமை சுவாமிகள் உள்ளிட்டோரும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்த
வேலூர் 25-1-24
வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகருக்கு தங்கக்கவசம் அணிவித்து வழிபாடு -காட்பாடி அடுத்த வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது பக்தர்கள் சுவாமி தரிசனம்
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு முருகர் வள்ளி தெய்வானைக்கு பால் தயிர் தேன் ஆகியவைகளால் சிறப்பு அபிஷேக அலங்காரங்களை செய்து தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதணைகளும் நடந்தது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
காட்பாடி அடுத்த வள்ளிமலையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றதுதைபூசத்தை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் மலைக்கோயில் உள்ள வள்ளி தெய்வானை சமய ஸ்ரீ சுப்ரமணியசாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது அதேபோல் தனி சன்னதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி அம்மைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது
மலை கீழ் கோவிலில் உள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சம்மத ஆறுமுகசாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் அரோகரா கோசமிட்டு ஸ்ரீ முருகப்பெருமானை வழிபட்டனர்
Comments
Post a Comment