விழிப்புணர்வு

 வேலூர்   25-1-24


வேலூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம போடிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு -  வேலூரிலிருந்து சென்னைக்கு புதிய பேருந்து சேவை துவக்கம் தொழிலாளர்களுக்குகுளிர்சாதன வசதியுடன் கூடிய அறை திறப்பு 
_________________________________________________
    வேலூர்மாவட்டம்,வேலூரில் நகர அரங்கில் இருந்து இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார் இதில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று துண்டுபிரசுரங்களை வழங்கி காந்தி சிலையின் அருகில் நிறைவடைந்தது அதன் பின்னர் வாக்காளர்கள் விழிப்புணர்வு குறித்த பேச்சு போட்டி கட்டுரை போட்டி ஓவிய போட்டி ஆகியவைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரொக்கபரிசினையும் கோப்பைகளையும் வழங்கினார் 
        முன்னதாக வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு புதியதாக புதிய பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார் இதே போல கிருஷ்ணா நகர் அரசு போக்குவரத்து பணிமணையில் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்க குளிர்சாதன வசதியுடன் அறை திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் திரளானோர் கலந்துகொண்டனர
 திருப்பத்தூர்மாவட்டம்   வேலூர்   25-1-24
  
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினார் மாவட்ட ஆட்சியர்


தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு  இன்று திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவங்கி வைத்தார்.இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவிகள், மகளிர் மன்றத்தை சேர்ந்த பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என இந்த ஊர்வலத்தில் கலந்துக்கொண்டனர்.ஊர்வலத்தில் வாக்களிப்பதே சிறந்தது நிச்சயம் வாக்களிப்பேன்என் வாக்கு விற்பனைக்கு அல்ல100% வாக்கு நமது இலக்நம் வாக்கு நம் உரிமை வாருங்கள் வாக்களிப்போம்வாக்கின் வலிமை தேசத்தின் வலிமை உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். 

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பல்வேறு போட்டிகள் வைத்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.‌


இந்த ஊர்வலத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட திட்ட இயக்குனர் உமாராணி,  கோட்டாட்சியர் பானு, வட்டாட்சியர் சிவப்பிரகாசம், மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்