VIT

வி.ஐ.டி பல்கலைக்கழக கணிதத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கணிதப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில். மாணவர்களுக்கு மற்ற பாடங்களை விட கணிதம் பாடம் மிகவும் முக்கியமானதாகும் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் கணிதத்தின் தேவை உள்ளது கணிதம் என்பது ஒரு தொழில்நுட்ப மொழி எனவே கணிதம் இல்லாமல் எதிர்காலம் இல்லை பிரச்சனைகளை தீர்க்கவும் புதுமைகளை படைக்கும் தீர்க்கமான புரிதல் ஏற்படும் கணிதம் அடிப்படையாக உள்ளது என்றார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். டீன் அருணை நம்பிராஜ் வரவேற்றார். கணிதத் துறை தலைவர் ஜெகதீஷ் குமார் போட்டிகள் நடத்தியது குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
 பள்ளி மாணவர்களுக்கு கணிதப் போட்டியை நடத்திய வி.ஐ.டி பல்கலைக்கழகத்தை பாராட்டுகிறேன். அறிவியல், வேதியியல், தாவரவியல் உள்பட பல படிப்புகளில் கணிதம்  உள்ளது. மருத்துவத் துறையில் கணிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கணிதத்தின் தேவை 18ம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தேவைப்பட்டுள்ளது. அப்போது மக்கள் விவசாயத்தில் இருந்தனர். இலக்கியத்திலும் கணிதம் உள்ளது. திருக்குறளில் மனிதநேயம் பற்றி கூறப்பட்டுள்ளது. விலங்கினங்களுக்கு எண்களை தெரியும்.
கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும். ஒரு மனிதனை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். படிப்பிலும் சிறப்பான இடம் பெற வழி வகுக்கும். இது ஒரு உலக மொழியாகும். நிதி துறையிலும் கணிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. கணிதத்தை கடினம் என நினைத்தால் கடினமாக இருக்கும். சுலபம் என நினைத்தால் சுலபமாகிவிடும். கணித மேதை ராமானுஜம் எளிய குடும்பத்தில் பிறந்தவர. தன்னுடைய கணித திறமையால் வாழ்க்கையில் உயர்ந்தார். கணித மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படிக்க வேண்டும். கணிதத்தில் யாரும் நோபல் பரிசு பெற்றதில்லை. கணிதத்தில் உயர்ந்த பரிசு என்றால் அது ஆபல் கணித பரிசாகும். இங்குள்ள மாணவர்கள் சிலர் கணித பாடத்தில் சேர வேண்டும். மேலும்  கணிதத்தில் உயர்ந்த பரிசான ஆபல் கணித பரிசை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கவுரவ விருந்தினராக பல்கலைக்கழக முன்னாள் மாணவியும், பெங்களூர் இஸ்ரோ விஞ்ஞானியுமான லட்சுமி கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், ஒருங்கிணைப்பு செயலாளர்கள் நந்தினி, கவுரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பு செயலாளர் ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்