நீதி
விதுரநீதி 13:--- தொலைந்து போனதை பற்றி துக்கபடாதவனும் ஆபத்து நேரத்தில் அறிவு மங்காதவனுமே பண்டிதன்
🏵️ விதுர நீதி சாஸ்திரம்!
இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது..
1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.
----------------------------------------
இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது..
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
----------------------------------------
இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்..
1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
----------------------------------------
இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது..
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
----------------------------------------
விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது...மன்னிக்கவும் கூடாது..
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்...
விதுரநீதி 14:--- ஒரு செயலை ஆரம்பித்த பின்பு மனம் போன போக்கில் நேரத்தை வீணாக்காமல் மனதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனே பண்டிதன்
விதுரநீதி 17:--- தடையில்லாத கனிவான பேச்சு ஊகிக்கும் திறன் காலத்திற்கேற்ப புத்திகூர்மையும் உடையவன் பண்டிதன
விதுரநீதி 16:--- ஒருவர் தன்னை புகழும்பொழுது மகிழ்ச்சி அடையாமலும் இகழும்பொழுது கண்கலங்காமல் இருப்பவனே பண்டிதன்
விதுரநீதி 15:--- ஈடுபடும் செயல்களில் (நற்செயல்கள் மட்டுமே) வெறுப்படையாமல் மனந்தளராமல் பொருளீட்டுபவன் பண்டிதன்
விதுரநீதி 18:--- படிக்கும் ஙால்களை சீக்கிரம் புரிந்து கொள்பவனும் படிப்பிற்கேற்ப கொள்கைகளை கடைபிடிப்பவனுமே பண்டிதன்
விதுரநீதி 19:--- கல்வி செல்வம் வீரம்(அதிகாரம்) ஆகிய மூன்றும் அதிகமிருந்தாலும் கர்வமில்லாமல் இருப்பவனே பண்டிதன்
விதுரநீதி 20:--- சாஸ்திரங்களை படிக்காதவன் கர்வமிருப்பவன் இழிவான செயல்களால் பணத்தை சம்பாதிப்பவன் மூடன்
Comments
Post a Comment