கூட்டம்
வேலூர் 29-2-24
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு வறட்சி ஏற்படும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க ஊராட்சித்தலைவர்கள் தயாராக இருக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு
________________________________________________________
வேலூர்மாவட்டம்,காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு வன் கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது இதில் ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமச்சந்திரன்,மாவட்டத்திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் திரளான ஊராட்சிமன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர்
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் வன் கொடுமை தடுப்பு சட்டம் குறித்து அனைத்து ஊராட்சி தலைவர்களும் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இக்கூட்டமானது நடத்தப்படுகிறது ஊராட்சிமன்ற தலைவர்கள் கிராமங்களில் முக்கியமானவர்கள் வரும் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் வறட்சி ஏற்படும் ஆகவே மக்களுக்கு குடிநீர் பிரச்சணை ஏற்படாமல் தீர்க்க வேண்டியது தலைவர்களாகிய உங்களின் பொறுப்பு அப்படி எங்கேனும் குடிநீர் பிரச்சணை ஏற்பட்டால் அதனை ஊராட்சி தலைவர்களாகிய நீங்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவணத்திற்கு கொண்டு வந்தால் நாங்கள் அதனை தீர்த்து வைப்போம் நானும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஒவ்வொரு கிராமம் கிராமமாக சென்று அடிப்படை வசதிகள் குடிநீர் வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்யவுள்ளோம் அவ்வாறு செய்து சிறந்த முறையில் மக்களுக்கு பாதுகாப்பான சுத்தமான குடிநீரை வழங்கும் தலைவர்களுக்கு சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாக்களில் பரிசுகள் விருதுகளை வழங்கி கௌரவிக்கவுள்ளதாக பேசினார்
Comments
Post a Comment