திறப்பு
வேலூர் 29-2-24
வசந்தபுரம் ரயில்வே கடவுப்பாதை மூடப்பட்டது நடைமேடை அமைப்பதற்காக நிரந்தரமாக மூடப்பட்டது இதனை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து அதிகாரிகளுடன் பேசி ரயில்வே கேட்டை திறக்க வழிவகுத்தார் பொதுமக்கள் மகிழ்ச்சி
__________________________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் நகரில் காட்பாடி விழுப்புரம் செல்லும் ரயில்வே மார்கத்தில் கண்டோண்மெண்ட் ரயில் நிலையம் அருகில் வசந்தபுரம் ரயில்வே கிராசிங்க் ரயில்வே கேட் உள்ளது இந்த பாதை வழியாக வசந்தபுரம் கஸ்பா உள்ளிட்ட பல பகுதி மக்கள் வேலூருக்கு வரும் வகையில் கேட் இருந்தது ஆனால் ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக நடைமேடை அமைப்பதாக ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடிவிட்டனர் இதனால் பொதுமக்கள் சுற்றி வரவேண்டிய நிலை பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியோர் வரை பாதிக்கப்பட்டனர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வசந்தபுரம்ரயில்வே கேட் அருகில் வந்து மக்களின் கோரிக்கையை நேரில் அறிந்து தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் பேசி நடைமேடை அமைப்பதை தற்காலிகமாக நிறுத்த கோரி மாற்று திட்டம் செய்து அதன் பின்னர் நடைமேடை அமைக்க வேண்டும் அதுவரையில் கேட்டை திறக்க கூறினார் அதிகாரிகளும் எம்பி கதிர் ஆனந்த் கோரிக்கையை ஏற்று ரயில்வே கேட்டை திறந்தனர் இதனால் வழக்கம் போல் அவ்வழி மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
Comments
Post a Comment