ரிவேரா தொடக்க விழா

வேலூர்     29-2-24


வாழ்க்கையில் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் தாய் தந்தையரை மதிக்க வேண்டும் - வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடியது தான் - இளம் கிரிக்கெட் வீரர்கள் வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு படியையும் இலக்கை நோக்கி செல்லும் படியாக கருத வேண்டும் - காட்பாடி வி.ஐடியில் ரிவேரா மாராத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்கள் பரிசுகளை வழங்கி இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சிவ துபே பேச்சு 
____________________________________________________________
   வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் இன்று மாராத்தான் போட்டிகள் நடந்தது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடந்தது இதில் பல்கலைக்கழக துணை தலைவர்கள் சங்கர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கிரிகெட் அணி வீரர் சிவம் துபே கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் பதக்கங்களை வழங்கினார் இவ்விழாவில் திரளான மாணவ,மாணவிகள் பங்கேற்றனர் இந்த ரிவேரா எனப்படும் கலாச்சார திருவிழா வரும் 3 ஆம் தேதி வரையில் நடக்கிறது இதில் பல்வேறு நாடுகளை மாநிலங்களையும்  சேர்ந்த மாணவ,மாணவிகளும் பங்கேற்கின்றனர் 
    இவ்விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சிவம் துபே பேசுகையில் மாணவ,மாணவிகள் இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி அடையலாம் நீங்கள் எப்போது உங்களது பெற்றோர்கள் தாய் தந்தையரை மதிக்க கற்றுகொள்ளுங்கள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமும் தருணமும் சென்னை சூப்பர் சிங்க்ஸ் அணிக்காக இளம் வயதில் விளையாடியது தான் வளரும் இளம் கிரிக்கெட் வீரர்கள் வெற்றியோ தோல்வியோ அவைகளை படிகளாக எடுத்துகொண்டு வாழ்க்கையில் இலக்கை நோக்கி செல்லுங்கள் என பேசினார்

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்