உதவி எம் எஸ்சுக்கு

சங்கீத மேதை இப்படி இருக்கக் கூடாது.. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு தகுந்த நேரத்தில் உதவிய எம்.ஜி.ஆர்..

சங்கீதம் அறியாதவனைக் கூட தனது பாடல்களால் இரசிக்க வைத்து இசையில் அற்புதத்தை உலகறியச் செய்த மாபெரும் மேதைதான் எம்.எஸ்.சுப்புலட்சுமி. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதன் சுருக்கமே எம்.எஸ்.சுப்புலட்சுமி என்றானது. புகழ்பெற்ற கர்நாடக இசை சங்கீத மேதையாக விளங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை அரசி, இசைப் பேரரசி, இசைக்குயில், இசைராணி போன்ற பல பட்டங்களுக்குச் சொந்தக் காரராக விளங்கினார். 

பல நாடுகளுக்கும் சென்று தனது அபார இசைத்திறமையால் பண்பாட்டுத் தூதுவராக உலக மக்கள் அனைவரையும் தனது இசைக்கு அடிமைப்படுத்தியவர். மீரா படத்தில் இடம்பெற்ற பாடலான காற்றினிலே வரும் கீதம் மொழிகளைக் கடந்து புகழ் பெற்றது. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவுக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடலாக விளங்கியது. 

சிறு வயதிலேயே மிகுந்த இசை ஞானம் கொண்டு விளங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி இசையோடு இணைந்து பாடினார் எம் எஸ். இதுவே அவரின் முதலாவது இசைத்தட்டு வெளியீடாகும். இவரது இசையைக் கேட்டு மயங்கிய ரசிகர்கள் இவர் பாடலுக்கு அடிமையாகினர். சேவாதனம் எனும் படத்தில் முதல் முதலில் அவரை கதாநாயகி ஆக்கி பாடவைத்தனர்.

அதன் பின்னர் அவர் ஏற்று நடித்த சகுந்தலை திரைப்படம் அவரை மேலும் புகழ்பெற வைத்தது. இதுமட்டுமல்லாது இன்று நாம் தினசரி பெருமாள் கோவில்களில் கேட்கும் வெங்கடேஸ்வர சுப்ரபாதம் இவரது மயக்க வைக்கும் குரலை தினசரி ஞாபகப்படுத்திக் கொண்ட இருக்கிறது. இப்படி பல புகழுக்குச் சொந்தக்காரரான எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் குடும்பத்தில் சொத்துப் பங்கீடு வந்த பொழுது அவர் வசித்த வீடு அவர் கையை விட்டுப் போய் விட்டதாம். 

அந்த வேளையில் சில மாதங்களாக வாடகை வீட்டில் தங்கியிருந்தார் எம்.எஸ்.சுப்புலட்மி. அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இந்த நிலையை அறிந்தார். உலக மக்களை தன் குரலால் வசீகரப் படுத்திய இசையரசிக்கு சொந்த வீடு இல்லையா என எண்ணி உடனே ஒரே நாளில் சொந்த வீடு ஒன்றை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். மேலும் இந்த வீட்டுக்கான தொகையை தனது சொந்த சேமிப்புப் பணத்திலிருந்து எம்.ஜி.ஆர் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு எம்.ஜி.ஆர் அவர்கள் யாராக இருந்தாலும் சரி. ஒருவருக்கு கஷ்டம் என்று வந்து விட்டால் அவர்களின் கண்ணீர் துடைத்து ஆதரவளிக்கும் கடவுளாகத் திகழ்ந்திருக்கிறார்.

நன்றி : john alagar.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்