பயிற்சி
நாள்..27.11.2023
*கல்வி இணை செயல்பாடுகள் காட்பாடி ஜெயின் பள்ளியில் இன்று ஜுனியர் ரெட்கிராஸ் பயிற்சி கருத்தரங்கம்*
&&&&&&&&&&
கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பினை அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைபடுத்த தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி வேலூர் மாவட்டம் காட்பாடி ஹரிஹந் நகரில் அமைந்துள்ள பகவான் மகாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் பயிற்சி பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளாக உள்ள பல்வேறு அமைப்புகளில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பும் ஒன்றாகும் இதன் பயிற்சி கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு பகவான் மகாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியின் அறங்காவலர் கே.ராஜேஸ்குமார் ஜெயின் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி முதல்வர் எம்.மாலதி வரவேற்று பேசினார். பள்யியின் கல்வி ஆலோசகர் எஸ்.கீதாசுரேஷ் முன்னிலை வகித்தார்.
ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் வேலூர் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் மாணவர்களுக்கான பயிற்சி கையேட்டினை வழங்கி பள்ளி அமைப்பினை தொடக்கி வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது… இந்த அமைப்பின் கொள்கைகளாக சுகாதாரம் சேவை நட்பு என்ற அடிப்படையில் மாணவர்கள் காலை உணவு தவிர்க்கவே கூடாது மேலும் நாம் ஆராக்கியமாக இருந்தால் தான் சேவை செய்யமுடியும் எனவே நம் ஒவ்வொருவரின் ஆராக்கியம் முக்கியம் எனவே நாம் ஆரோக்கியமாக இருக்க சரிவிகித உணவினை உட்கொள்ள வேண்டும் முடிந்த சேவைகளை செய்வோம் நல்ல நட்பினை பெறுவோம் பள்ளியில் கல்வி இணை செயல்பாடுகளில் பங்கேற்போம் அதே வேளையில் கல்வியிலும் அதிக கவனம் செலுத்துவோம் என்றார்.
ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பில் இணைந்துள்ள மாணவர்கள் கொள்கைகள், உறுதிமொழி, ஜுனியர் ரெட்கிராஸ் பாடல், உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டனர். பள்ளியின் ஆலோசகர் ஆர்.சரண்யா நன்றி கூறினார்.
&&&&&&&&&&&&&&
படவிளக்கம்
காட்பாடி ஜெயின் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி கருத்தரங்கில் ஜுனியர் ரெட்கிராஸ் கையேட்டினை மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் வழங்கியபோது எடுத்தப்படம் உடன் பள்ளி அறங்காவலர் ருக்ஜி கே.ராஜேஸ்குமார் ஜெயின், பள்ளி முதல்வர் எம்.மாலதி கல்வி ஆலோசகர் எஸ்.கீதா சுரேஷ் ஆகியோர்.
Comments
Post a Comment