நீதி
*❤️இன்றைய சிந்தனை*
01.03.2024-வெள்ளிக்கிழமை
*இவர்களுக்குத் தோல்வி என்பதே கிடையாது...!*
.....................................................................................
*மிருகத்திடம் மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவை...!"*
..........................................
*சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும்,*
*கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும்,காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறினையும், நாம் கற்றுக் கொள்ள வேண்டும்...!*
1. சிங்கம்
......................
சிங்கம் எந்த ஒரு செயலையும் உடனடியாகச் செய்யாது. நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாகச் செயல்படும்...
2. கொக்கு
.......................
கொக்கு தன் இரையான மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு செயலை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வார்கள்...
3. கழுதை
......................
கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையைத் தொடர்ந்து செய்யும்..வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்..
தன் முதலாளிக்கு எப்போதும் கட்டுப்பட்டிருக்கும் . ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை...
4. சேவல்
.....................
சேவல் நாம் படுக்கையில் இருந்து எழும் முன்பே அதிகாலையிலேயே எழும். மற்ற மிருகங்களிடம் தன் குஞ்சுகளைக் காக்க துணிவாக சண்டையிடும்....
தன் குஞ்சுகளுக்குத் தேவையானவற்றை சேகரித்துப் பிரித்துக் கொடுக்கும்...
தனக்குத் தேவையானவற்றை தானே உழைத்துத் தேடிக் கொள்ளும்...
இந்த நான்கும் சேவலிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை...
5. காகம்
...................
இரவில் தன் குடும்பத்துடன் சேர்ந்திருக்கும். தேவையான பொருள்களை முன்கூட்டியே சேமித்து வைக்கும். யாரையும் எளிதில் நம்பாது, துணிவு, எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கை யிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை...
6. நாய்
.................
நாய் கிடைப்பதை உண்டு மனநிறைவு கொள்ளும். உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினியாக இருக்கும். நன்றாகப் பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருக்கும்...
நல்ல உறக்கத்தில் இருந்தாலும் சிறிய சலசலப்புக் கேட்டாலும் உடனடியாக எழுந்து விடும். தன் முதலாளிக்கு இறுதிவரை விசுவாசமாக இருக்கும்...
தன்னை விடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் துணிவுடன் எதிர்க்கும்...
இந்த ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்...
எவரொருவர் மேலே கூறப்படும் இந்த ஆறு வழிமுறைகளைக் கடைபிடிக்கிறாரோ, அவர் எதிலும் வெற்றியடைவார். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றியும் பெறுவார்...!
*ஆம் நண்பர்களே...!*
*''அன்பு, பாசம், பணிவு, நன்றி, பொறுமை, சுறுசுறுப்பு, கடும் உழைப்பு, ஈகை குணம், மன உறுதி, ஆரோக்கியம், இருப்பதில் மனநிறைவு, இவைகள் ஒருசார பெற்றிருப்பவர்கள் வாழ்வில் எப்போதும் சாதனை படைப்பார்கள்...!*
Comments
Post a Comment