கூட்டம்

ஓய்வூதிய பத்திரிகையாளர்களுக்கு சங்கம் என்றைக்கும் துணை நிற்கும் 

தமிழ்நாடு ஓய்வூதிய பத்திரிக்கையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் உறுதி

 வேலூர்.பிப்ரவரி.27 தமிழ்நாடு ஓய்வூதிய பத்திரிக்கையாளர்கள் நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா வேலூர் காட்பாடியில் நடைபெற்றது.விழாவுக்கு சங்கத்தின் துணைத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான துரை கருணா தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார் .

சங்கத்தின் தலைவர் பி. ஆர். சுப்பிரமணி சிறப்புரையாற்றினார் அப்போது அவர் தமிழ்நாடு ஓய்வூதிய பத்திரிக்கையாளர்கள் நல சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சங்கம் என்றென்றும் துணை நிற்கும் என்றும் அவர்கள் சந்திக்கின்ற எந்த பிரச்சனைகளை பற்றியும் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவர்களது பிரச்சனைகளை கலைவதற்கு சங்கம் முழுவிச்சில் களம் இறங்கும் என்றும் கூறினார்.   

குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் சங்கம் நூறு சதவீதம் உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசு ஓய்வூதிய பத்திரிகையாளர்கள் நலனில் மிகுந்த அக்கரை காட்டி வருவதை சுட்டிக்காட்டிய அவர் அதற்காக முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் .

இந்த விழாவில் செயலாளர். பழனியா பிள்ளை ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஞானக்குமார் சங்கத்தின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். 

சங்கத்தின் நிறுவனர் ஜி. கே .ஸ்டாலின் சங்கத்திற்கு நிதி நிலை எவ்வளவு அவசியம் என்பது குறித்தும் அதை பெறுவதற்கான வழிவகைகள் குறித்தும் எடுத்துரைத்தார் .

சிறப்பு விருந்தினர்கள்   நல்லாசிரியர் துரை பத்மநாபன்,பேராசிரியர் சக்கரவர்த்தி, ஓய்வுபெற்ற பதிவு அலுவலர் சிந்தனை ச் செல்வன், வழக்கறிஞர் லெனின் பாலு வாழ்த்துரை வழங்கினர்.

இந்த விழாவில்  பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டில்லி மோகனரங்கத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவரது படத்திற்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தப்பட்டது .

இந்த விழாவை ஒட்டி நடைபெற்ற நான்காவது நிர்வாகக் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் முக்கூடல் சந்திரசேகர் நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்