அவதி

வேலூர் காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டை கிராமத்தில் SLE எனப்படும் கொடிய நோயால் ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் அதற்கு சிகிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எளிய குடும்ப பின்னனி கொண்ட வள்ளியின் கணவருக்கு முதலில் நோய் தொற்ற பிறகு மகனுக்கு பாதித்து இரு கண்களும் செயலிழந்து 27 முறை அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு சென்றுள்ளது.

தற்போது மகளுக்கும் நோய் தாக்கியுள்ளது. மூன்று பேரும் மாதம் மாதம் மருந்து மாத்திரைகள் வாழ்நாள் முழுவதும் எடுத்து கொள்ள வேண்டும் என்பது மருத்துவரின் பரிந்துரை. இல்லையேல் உடல் உறுப்புக்கள் பாத்திக்கபட்டு உயிருக்கு ஆபத்தாகும். மாதம் 5000 வரை செலவு செய்ய போதிய வருமானம் இல்லாததால் மகனை கருணை கொலை செய்ய சொல்லி கண்ணீர் விடும் தாய்.

இவருக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான மருத்துவ செலவுகளுக்கு பண உதவி செய்யப்பட்டது. அரசு உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.


- Dinesh Saravanan

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்