5 ஆண்டுகளாகஏன் வரவில்லை திமுக வேட்பாளரிடம் மக்கள் கேள்வி
வேலூர்மாவட்டம்
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரத்தின் போது
ஐந்தாண்டுகளாக எதுவும் செய்ய வரவில்லை இப்போது வருகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்த நபர் தள்ளுமுள்ளு பரபரப்பு
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் இன்று காலை முதல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்
சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் தற்ப்போது பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது
அங்கு வந்த சுரேஷ் என்கின்ற நபர் ஐந்தாண்டுகளாக இப்பகுதிக்கு வரவில்லை எதுவும் செய்யவில்லை இப்போது என் பிரச்சாரத்திற்கு வந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சத்தம் போட்டார்
அங்கிருந்த திமுக தொண்டர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சாலையின் ஓரத்திற்கு தள்ளி சென்றனர்
பின்பு காவல்துறையினர் சமாதானம் பேசி அழைத்துச் சென்றனர் இதனால் இப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Comments
Post a Comment