எந்த கல்லூரியில் படிக்கலாம்
எந்த கல்லுாரியில் படிக்கலாம்
கடைசி ஆண்டு படிக்கும் போதே
கேம்பஸ் தேர்வு மூலம் வேலை
வழங்கப்படுவது வி.ஐ.டி., யின்
தனிச்சிறப்பாகும்.
வேலுார் –
வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகம் 1984 ல் தொடங்கப்பட்டது. 2000 வரை சென்னை பல்கலையின் கீழ் செயல்பட்டு வந்தது. 2001 முதல் நிகர் நிலைப்பல்கலையாக உயர்வு கண்டது. 2006 செப்., மாதம் வி.ஐ.டி., பல்கலையாக மாற்றப்பட்டது. இங்கு 655 ஆசிரியர்கள் சேர்ந்து 1,410 நிருவாகப்பணியாளர்கள் உள்ளனர். 12 ஆயிரத்து 250 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். வேந்தராக ஜி.விஸ்வநாதன் உள்ளார்.
இங்கு பி. டெக் பொறியியல், பி. ஆர்க்., பிடிஎஸ் இண்டஸ்ரியல் டிசைன், பி. ஆர்க், பி.எஸ்.சி., அக்ரி, பி.எஸ்.சி., கேட்டரிங் அண்ட் ஓட்டல் மேனேஜ்மண்ட், பிசிஏ, பிபிஏ, பி.காம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி ஆனர்ஸ், பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன், எம். டெக்., சாப்ட்வேர், எம். டெக்., சி.எஸ்.சி., அண்ட் டேடா சயின்ஸ்,
எம்.எஸ்.சி., யில் பாட்னிலாஜிகலி, கணக்கு, பிசிக்ஸ், கெமிஸ்டரி, புட் சயின்ஸ், கம்ப்யூட்டர் ஸ்டாடிசிக்ஸ், எம்.எஸ். டபுள்யூ மாஸ்டர் சோசியல் ஒர்க் என 18 இளங்கலை, 32 முதுகலை பாடப்பிரிவுகள் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பாடப்பிரிவுகளும் உள்ளன.
இந்தியா டுடே பத்திரிக்கையால் நடத்தப்பட்ட இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லுாரிகள் என்ற கருத்து கணிப்பில் வி.ஐ.டி., 10 வது இடம் பெற்றுள்ளது. உலக பல்கலை தர வரிசை பட்டியலில் ஒன்பதாவது இடம் பெற்றுள்ளது. ஆண்டு தோறும் நான்கு நாட்கள் ரிவேரா என்ற கலை நிகழ்ச்சி என 100 நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
250 ஏக்கரில் அமைந்துள்ள வி.ஐ.டி., யில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கட்டடம் ஒதுக்கப்பட்டு வகுப்புக்கள்
நடக்கிறது. மாணவர்களுக்கென 13, மாணவியருக்கென நான்கு விடுதிகளும் உள்ளன. இங்கு கடைசி ஆண்டு படிக்கும் போதே கேம்பஸ் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு வேலை வழங்கப்படுவது தனிச்சிறப்பாகும்.
Comments
Post a Comment