சொந்த தொழில் தொடங்கலாம்



என்னோட  வீட்டுக்கு  அருகில்  OMR  ரோட்டில்   ஓரத்தில்  பிளாட் பாரத்துக் அருகில். 1x1 இல் ஒரு  பானி  பூரி  கடைக்காரன்   பையன் பானி  பூரி  விற்றுக்கொண்டு  இருப்பான்  .. 
வருஷம்  365 நாளும்  அங்கே நிற்பான்   ...

நானும்  என்  மகளும்  அவனிடம்  பலமுறை  பானி  பூரி  சாப்பிட்டு  இருக்கோம்   ....

.... அவன் ஒரு  பெரிய  கூடை  நிறைய  பானி  பூரி கொண்டுவந்து   முழுசும்  காலி  செய்துவிட்டு தான்  வீடு செல்வான்   ..

எவ்வளவு  சம்பாதிப்பாய்  என்று  கேட்டேன்  ..
தினமும்  ஒரு  4000 ரூபாய்  என்று  சொன்னான்  ..

வாய்ப்பே  இல்லை  .... 

நான் பொறாமை படுவேன் என்று குறைவாக சொல்கிறான்..

நிச்சயமாக 10,000 தாண்டும்   , 
ஏனென்றால்  நான்  சென்ற  ஒவ்வொரு  முறையும்  பார்க்கிறேன் ..

ஒரு  10 நிமிடத்துக்குள்  400 ரூபாய்  சம்பாதிக்கிறான்  ...

எந்த  ஊர்  என்று  கேட்டேன்!!  உத்திரபிரதேசம்  என்றான்  ..

உத்திரபிரதேசத்தில்  இருந்து  இங்கே வந்து அரைகுறை  தமிழை  கற்றுக்கொண்டு 
பான  பூரி  விற்பவன்  லட்சக்கணக்கில்  சம்பாதிக்கிறான். 

வேலைக்கு வருபவர்கள் எல்லோரும் 
பொதுவாக வட இந்தியர்கள் என்று சொல்லி விடுகிறோம்....

பாதிக்கும் மேற்பட்டவர்கள் தொழில் செய்கிறார்கள்...

அதே  அளவு  நம்ம  மக்கள்  எங்கேயோ  தினக்கூலிக்கு  சென்றுகொண்டு , கடன்  வாங்கிக் கொண்டு...

டாஸ்மாக்  ல கண்ட நேரத்தில் சரக்கு வாங்கி  குடித்துக்கொண்டு  காலம்  கடத்துகிறார்கள். 

நான்  இதுவரை  மூன்று  அலுவலகம்  சென்னை  கோவையில்  உருவாக்கி  இருக்கிறேன்.

அதற்கு  தேவையான மரம், இரும்பு  , எலெட்ரிக்கல்  லைட்டு  , பல்பு , சாமான் மொத்தமும்  சேட்டுக்கடை  கடை  .. 

பல லட்சம் வாங்கி இருப்பேன்..

மொத்தமும் வட இந்தியர்கள்.....

 எனது  பணம்  முழுசும் வடநாட்டுக்கு  போய்விட்டது  ... 

நான்  ஒரு  சின்ன  பிசினெஸ்  மேன்,

 எனக்கே  இவ்வளவு  என்றால்    பல  நூறு கோடியில்  கட்டிடம்  கட்டும்  பில்டர்  நினைத்து  பார்த்தால்  ...
 மொத்தம்  அங்கே  போகுது ...

அதேபோல    விவசாய  பொருட்கள்  அரிசி  , பருப்பு  , வெங்காயம்  , உருளைக்கிழங்கு  , கோதுமை  மொத்தமும்  வடநாடு 

வீட்டுக்கு  தேவையான  மளிகை  உட்பட மொத்த  பொருட்களும்  வடநாடு. 

ஜவுளி  மொத்தமும்  வடநாடு  .....

இன்றைய  நிலையில் 

தமிழ்நாடு  மொத்தமாக  வட  இந்தியர்கள்  பிடியில்  சிக்குகிறது  ....

*இதை பொறாமை குணத்தோடு சொல்ல வில்லை....*

அவர்கள் திருடி  பிழைக்க வில்லை,  ஏமாற்று செய்து பிழைக்க வில்லை..

உழைத்து தொழில் செய்து பிழைக்கிறார்கள்...

அவர்களால் நமக்கு எதுவும்  பாதிப்பு  இல்லைதானே ?

அவர்களை விடுவோம்....
  

*தமிழர்கள்  என்பவர்கள்  டாஸ்மாக்  என்ற  ஆயுதத்தால்  வீழ்ந்து  விட்டோம்  ....என்பது மிகப்பெரிய  உண்மை*

குடிகாரர்கள் உலகம்  முழுவதும் இருகிறார்கள்..

சினிமா   ரசிகர்கள் உலகம் முழுவதும் இருகிறார்கள்.

 *நம்மவர்கள் குடியை எல்லைமீறி  குடும்பம்  கெடும்  அளவு  குடிக்கிறார்கள்.*

அதுமட்டுமல்ல  .. சினிமா மோகம்   எல்லை மீறி நடிகர்,நடிகை மீது உயிரே வைக்கிறார்கள், கோயில் கட்டும் அளவு பைத்தியம் ஆகிறார்கள்.

பண்டிகை  , இலவு  இடைஞ்சல்  , திருவிழா  என்று  பாதி  நாள்  விடுமுறையில் ஓடிவிடுகிறது  ....

போதா  குறைக்கு 

அரசியல் வாதிகள் தமிழ்நாடு  , தமிழன்  என்று  சொல்லி  அரசியல்  வாதிகள், சினிமாக்காரர்கள்  மக்களை  கேணையர்கள் ஆக்கி தெருவில் அலைய விட்டுவிட்டார்கள்  ...

மொத்தத்தில்  நம் பெரும்பாலான  தமிழர்கள் இன்றைய வயிறு நிரம்பினால் போதும் என்று..... வாழ்கிறார்கள் என்பதே   நிதர்சனம்......

Note:-

என்னோட கேள்வி...  5000 , 10000 என்று சம்பளத்துக்கு வேலை தேடி அலையும்  தமிழர்கள் ஏன் சொந்த தொழில் தொடங்க கூடாது ?

படிப்பறிவு இல்லாத வடக்கர்கள் செய்யும் தொழிலை 

 மெத்த படித்தேன் , 
MBA , MCA, B.E, PhD மற்றும் MBBS படித்தேன் என்று சொல்லிக் கொண்டு திரியும் நீங்க ஏன் செய்ய கூடாது ?

வேலை கொடு,
வேலை கொடு என்று ரெஸ்யூம் என்கிற திருவோட்டை தூக்கி கொண்டு அடுத்தவன் கிட்ட போய்  ஏன் கையேந்த வேண்டும்.?

நீங்களே ஏதாவது ஒரு சொந்த தொழில் தொடங்கலாம். தானே ?
....

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்