ஏலகிரி மலையை சுற்றி பார்க்கலாம் வாங்க
சுற்றுலா
ஏலகிரி மலையை சுற்றிப்பார்க்கலாம் வாங்க
| ம : || || | . | | | | |
மலைகளின் இளவரசி
ஏலகிரி மலை
திருப்பத்துார் மாவட்டம்
ஏலகிரி மலை
தமிழ்நாட்டின் சுற்றுலா கோடை வாசஸ்தலங்களில் ஏலகிரி மலை ஒன்றாகும். ஆண்டு முழுவதும் இதமான குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையுடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் எல்லா காலங்களிலும் இங்கு வந்து செல்ல உகந்த இடமாகும். இங்குள்ள 14 கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தோட்டக்கலை, விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.
மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பொன்னேரி கிராமத்திலிருந்து ஏலகிரி மலைக்கு 14 வளைவுகள் கடந்து செல்லும் போது இதமான காற்றும், பசுமையான இயற்கைக் காட்சிகளும் சுற்றுலா பயணிகளின் மனதை பரவசப்படுத்தி வருகிறது.
பரப்பளவு: 29.2 சதுர கிலோ மீட்டர்
மக்கள் தொகை: 5 ஆயிரம்
மலையின் உயரம்: கடல் மட்டத்திலிருந்து 1048.5 மீட்டர்
சீதோஷ்ண நிலை: கோடை காலம் 34 சென்டி கிரேடு
குளிர் காலம் 11 சென்டி கிரேடு
ேஹாட்டல்: சைவம், அசைவம் நிறைய உள்ளன. ஏரியில் பிடிக்கப்பட்ட மீன்கள் சுட சுட சாப்பிடலாம்.
வாங்க வேண்டியவை
பலாம்பழம்
மாம்பழம்
மலைத்தேன்
பார்க்க வேண்டிய இடங்கள்
1. புங்கனுார் ஏரி படகு குழாம்
2. குழந்தைகள் பூங்கா
3. முருகன் கோவில்
4. அத்தனாவூர் மற்றும் நிலாவூரில் அமைந்துள்ள அரசு பழத்தோட்டம்
5. மங்கலம் ஏரி
6. நீண்ட நடைபயணப்பாதை
7. நிலாவூர் தம்புரான் குளம், தேவ நாச்சியப்பன் கோவில்
8. பண்ணை பார்வை மையம்
9. அத்னாவூர் ஏரி படகு குழாம்
10. ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி : ஏலகிரி மலையில் பாய்ந்தோடும் அத்தாறு என்ற ஆறு ஜடையனுார் என்ற இடத்திலிருந்து 30 மீட்டர் உயரத்திலிருந்து நீர் வீழ்ச்சியாக கீழே விழுகிறது. இங்கு செல்ல ஏலகிரி மலையிலிருந்து கீழே இறங்கி திருப்பத்துாரிலிருந்து 15 கி. மீ., பயணமாக வாகனங்களில் செல்லலாம். அல்லது ஏலகிரி மலை நிலாவூரிலிருந்து 2 மணி நேரம் காட்டு வழி நடைப் பயணமாகவோ செல்லலாம். இதற்கு முன் கூட்டியே வனத்துறையினரின் அனுமதி பெற வேண்டும்.
சுற்றுலா பயணிகள் தங்க ேஹாட்டல்
எஸ்டிடி கோட் எண் 04179
1. ஹோட்டல் ஹில்ஸ் 245301
2. ேஹாட்டல் ஏலகிரி 245236
3. ஓய்எம்சி 245226
4. கண்ணாஸ் கொஸ்ட் ஹவுஸ் 254356
5. ேஹாட்டல் ஓ நிலா 245371
6. ேஹாட்டல் வுட்சைட் 245267
7. தாஜ் கார்டன்ஸ் 245231
8. ேஹாட்டல் அசோக் 245211
9. ஹாலிடே ெஹல்த் ரெசார்ஸ் 245451
10. லேக் வியூ 245203
11. கட்டட மையம் 245428
துாரம்: சென்னையிலிருந்து 236 கிமீ., வேலுாரிலிருந்து 91 கி.மீ. துாரத்தில் திருப்பத்துார் செல்லும் சாலையில் உள்ளது. அதாவது சென்னை, வேலுார், ஆம்பூர், வாணியம்பாடி க்கு சென்று அங்கிருந்து சேலம் மார்க்கத்தில் திருப்பத்துார் செல்லும் சாலையில் சென்று பொன்னேரி கூட்டு ரோடுக்கு வர வேண்டும். அங்கிருந்து ஏலகிரி மலைக்கு செல்லலாம். வாகனத்தில் வருவவர்களுக்கு வசதியாக நல்ல ரோடு உள்ளது.
ரயிலில் வருபவர்கள் சென்னையிலிந்து கோவை, பெங்களூரு மார்க்கத்தில் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேனில் இறங்க வேண்டும். அங்கிருந்து 20 கி.மீ., துாரத்தில் உள்ளது. நிறைய டாக்சிகள் உள்ளன.
பஸ்சில் வருபவர்கள் சென்னையிலிந்து வேலுாருக்கு வந்து அங்கிருந்து திருப்பத்துார் செல்லும் பஸ்சில் ஏறி பொன்னேரி கூட்டு ரோடுக்கு வரலாம். அங்கிருந்து மலைக்கு செல்ல பஸ்கள் உள்ளன. நிறைய ஆட்டோக்களும் உள்ளன.
ஒரு நாள் பயணமாக வந்து செல்லாம்.
படம், கட்டுரை: எ. தினகரன்,
தினமலர் மூத்த நிருபர் (பணி நிறைவு)
சென்னை
செல்: 94434 03480
மெயில்: adnvlr@gmail.com
Comments
Post a Comment