காலில் வெள்ளி கழுத்தில் தங்கம் ஏன் அணிய வேண்டும்
*காலில் வெள்ளியும் கழுத்தில் தங்கமும்* ஏன் அணிய வேண்டும் தெரியுமா.....?
திருமணங்களில் **ஆணுக்கு இடது பக்கத்தில் பெண்ணை அமர வைப்பதின்* காரணம் என்ன.....?
இரண்டையும்
தெரிந்து கொள்வோம். வாருங்கள்.....
நாம் சிறு வயதில் எதையாவது செய்யும்போது வீட்டில் உள்ள பெரியோர்கள், ‘அதை செய்யாதே, இதை செய்யாதே’ என்று கூறுவார்கள். அதற்குக் காரணம் கேட்டால் எதையாவது ஒன்றை கூறுவார்கள். அதில் நமக்கு உடன்பாடு இருக்காது.
*கோபம் தான் வரும்.*
ஆனால், கொஞ்சம் அனுபவம் வந்த பிறகு அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் அவர்கள் சொன்னதில் உள்ள அறிவியல்பூர்வ அர்த்தமுள்ள விளக்கம் ஒன்று ஒளிந்து இருப்பதை அறியலாம். அவற்றில் சிலவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
முன்பெல்லாம் பிறந்த குழந்தைக்கு தாய் வீட்டில் அரைஞாண், கொலுசு போன்றவற்றை வெள்ளியில் போட்டு அனுப்புவது வழக்கம். கழுத்திலும் கையிலும்தான் தங்கத்தில் நகை செய்து போடுவார்கள். இடுப்பு, கால் போன்றவற்றில் வெள்ளியைத்தான் அணிவிப்பார்கள்.
இதற்குக் காரணம் என்னவென்றால் கணுக்காலில் எப்போதும் உராய்ந்து கொண்டு இருக்கும் நகை கொலுசு. தங்கம் உராய்ந்து கொண்டிருந்தால் வாதம் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகின்றது. மேலும், *தங்கம் மகாலட்சுமி அம்சம்* ஆகும். அதனால் தங்க நகையை காலில் அணிவது தரையில் போட்டு மிதிப்பதற்கு சமம் என்று நம் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆதலால்தான் கணுக்காலில் உராய்வதற்கு ஏற்றபடியாக வெள்ளி கொலுசை அணிவித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
சிறு வயதில் பஞ்சலோகம் அணிவதன் பயன்: தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் என்பவை சேர்ந்த உலோகக் கலவையே பஞ்சலோகம். நாம் வாழும் பிரதேசத்தில் பொதுவாக உலோக அம்சம் குறைந்த மண் காணப்படுகிறது. இந்த குறை இயற்கையிலும் இங்கு வசிக்கும் மனிதர்களிலும் பிரதிபலிக்கும். இதைப் புரிந்து கொண்டதனால் பண்டைய மக்கள் பஞ்சலோகத்தினை உபயோகிக்க பரிந்துரை செய்தனர். பஞ்சலோகத்தின் சக்தி மனித உடலை சுற்றி வரும் பிராண சக்தியைப் பலப்படுத்தி, உடலின் உலோக சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதற்காகவே சிறுவயதில் பஞ்சலோகம் அணிவது என்பது மரபாயிற்று.
∆∆∆∆∆∆∆
∆∆∆∆∆∆∆
பெண் ஆணுக்கு இடது பக்கம் ஏன் அமர வேண்டும் என்றால், ஒவ்வொரு உடலினுடைய வலது பாகத்தில் *ஆண் ஜீவணுக்களும் இடது பாகத்தில் பெண் அணுக்களும்* உள்ளன என்று விஞ்ஞானம் குறிப்பிட்டுள்ளது. அதனால்தான் பெண் எப்போதும் ஆணுக்கு இடது பக்கம் உட்கார வேண்டும் என்பது ஆச்சாரம். மணப்பந்தலிலும் இடது பக்கமே பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணமாகக் கூறுவது பெண்ணின் வலது பாகமாக செயல்பட வேண்டியது ஆண் என்றும், ஆணின் இடது பாகமாக செயல்பட வேண்டியது பெண் என்றும் கூறப்படுகிறது. இந்த நம்பிக்கைக்கு பலம் அளிப்பது வலது பக்கம் ஆணும் இடது பக்கம் பெண்ணும் சேருகின்ற அர்த்தநாரீஸ்வர நம்பிக்கை.
இப்படி மனித வாழ்வின் ஒவ்வொன்றிலும் *ஆன்மிகமும் விஞ்ஞானமும்* ஒன்றிச் செயல்படுவதைக் காணலாம்.
தெரிந்து கொள்ளுங்கள்.....
🙏🙏🙏🙏🙏
Comments
Post a Comment