தாலாட்டு
🌷மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ!🙏🌷
ஸ்ரீகுலசேகராழ்வார் ♦ பெருமாள் திருமொழி 8.1
நிலை நின்ற புகழையுடைய
கௌஸல்யையினுடைய் அழகிய வயிற்றிலே பிள்ளையாகத் திருவவதரித்தவனே!
தென்னிலங்கைக்கு இறைவனான ராவணனுடைய பத்துத் தலைகளையும் சிதறப் பண்ணினவனே!
.
செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய் அழிவில்லாததாய்
விலக்ஷணமாய் பெரிதான
திருமதிளாலே நாற்புறமும் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற நீலரத்நம் போன்ற எம்பெருமானே!
எனக்கு போக்யமான அம்ருதமாயிருப்பவனே!
ஸ்ரீராமனே! தாலேலோ!
(உனக்குத்) தாலாட்டு 🙏🪷🌷
Comments
Post a Comment