தீர்ப்பு
வேலூர் 29-4-24
20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் வேலூர் மாநகராட்சி முன்னாள் ஆணையருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிப்பு - வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு
வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சியில் 2017-ம் ஆண்டு டெங்கு கொசு ஒழிப்பு பணி ஒப்பந்தம் எடுத்திருந்த பாலாஜி என்பவரிடம் ஒப்பந்த தொகை 10 லட்சத்து 23 ஆயிரத்தை விடுவிக்கரூ.20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமார் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் முன்னாள் வேலூர் மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்
Comments
Post a Comment