108 பால்குடம்
வேலூர் 22-5-24
காட்பாடி அடுத்த வள்ளிமலை கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 108 பால் குட அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவிலில் முருகப் பெருமான் அவதரித்த தினமான வைகாசி விசாகத்தையொட்டி 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக வள்ளியம்மை சன்னதியில் உள்ள மூலவர் ஆறுமுகசாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தேரடி விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் 444 படிகள் மலை மீது ஏறி பம்பை மேளம் மலைக்கோவில் மீதுள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு பால்குட அபிஷேகம் நடைபெற்றது அபிஷேகம் முடிந்தவுடன் மூலவர் வெள்ளி கவசத்தில் எழுந்தருளினார் வள்ளியம்மைக்கு தங்க கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்
Comments
Post a Comment