கருட சேவை
ராணிப்பேட்டைமாவட்டம்
வாலாஜா அருகே மிகவும் பழமை வாய்ந்த திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ கருட சேவை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சவாமி தரிசனம்
ராணிப்பேட்டைமாவட்டம் ,வாலாஜா வெங்கட்ரமண பாகவதர் வீதியில் அமைந்துள்ள மிகவும் பழமையான திருத்தலமான ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் கோவிலில் நடைபெறுவது வழக்கம் மேலும் 10 நாட்களும் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான இன்று கருட சேவை தினத்தை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து வேத பண்டிதர்கள் வரதராஜ பெருமாள் பெருந்தேவி தாயார், ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனங்கள் செய்யப்பட்டு, பட்டாடை உடுத்தி, வைர, வைடூரிய, திருவாபரணங்கள் மற்றும் பல்வேறு புஷ்ப மாலைகளாலும் மலர்களாலும் சிறப்பான முறையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த கருட வாகன ரதத்தை கூடியிருந்த திரளான பக்தர்கள் தோளில் சுமந்தபடி கோவில் முழுவதும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சியளித்தார் தொடர்ந்து நடைபெற்ற பிரம்மோற்சவ கருட சேவை தினத்தில் திருப்பாவை உள்ளிட்ட பல்வேறு பக்தி பாடல்களை பாடியபடி வாலாஜா சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்
Comments
Post a Comment