திருட்டு

திருப்பத்தூர்மாவட்டம்   
  22-5-24

 வாணியம்பாடியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையில்  ஈடுபட்ட இளைஞர் கைது :11 மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் விசாரணையில் தகவல்.-அவரிடமிருந்த 5 சவரன் நகைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை 



திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  நியூடவுன்  பகுதியில் வசித்து வருபவர்  தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்  விக்னேஷ் இவர் கடந்த மாதம் 29ந்தேதி இரவு குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார்.இந்த நிலையில் இதை நோட்டமிட்ட மர்மநபர்கள்  வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த  5 சவரன் தங்க நகைகள்,46 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை  கொள்ளையடித்து சென்றுள்ளனர்.வெளியே சென்ற விக்னேஷ் இன்று அதிகாலை 5 மணிக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்க பட்டுள்ளது கண்டு  அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.மேலும்  பீரோவில் இருந்த பணம் நகை கொள்ளை போனது தெரிய வந்துள்ளது.இதை தொடர்ந்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.தகவல் அறிந்த நகர போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் மேலும் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கொள்ளையனை தேடி வந்த நிலையில் வாணியம்பாடி புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இலைஞரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் தனிப்படைப்புலி சார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டத்தில் பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த  ஆனந்த் தினேஷ் என்பதும், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தலைமறைவானது தெரிய வந்தது 


மேலும் இவர் மீது சேலம் ஈரோடு கோவை திருப்பத்தூர் வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த வாணியம்பாடி நகர  காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்