தேர் திருவிழா
ராணிப்பேட்டைமாவட்டம்
ரத்தினகிரி பாலமுருகன் ஆலயத்தில் 2 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ மரத்தேர் விழா திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
___________________________
ராணிப்பேட்டைமாவட்டம்,ரத்தினகிரியில் அருள் மிகு பாலமுருகன் திருக்கோவில் உள்ளது இன்று பாலமுருகன் அடிமை சுவாமிகள் தலைமையில் மரத்தேர் திருவிழாவானது இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்றது இதில் இந்த ஆலயம் கட்டப்பட்டு 40 ஆண்டுகாலமாகி மிகவும் புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் தற்போது தான் இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா வைகாசி விசாக விழாவாக நடந்தது இதில் சிறப்பு யாக பூஜைகள் செய்து வேதமந்திரங்கள் முழங்க பூர்னஹதியானது நடந்தது பின்னர் ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனைக்கு பின்னர் முருகர் வள்ளி தெய்வானை மேளதாளங்கள் முழங்க கொண்டு செல்லப்பட்டு தேரில் வைத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கங்களை ஏழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர் இந்த தேரானது ரத்தினகிரி மலையை சுற்றி வலம் வந்த பின்னர் நிலையை அடையவுள்ளது
Comments
Post a Comment