சீல்
திருப்பத்தூர்மாவட்டம் வேலூர் 30-5-24
குனிச்சி பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மற்றொரு பெயரில் மெடிக்கல் பார்மசி லைசன்ஸ் வைத்து போலி மருத்துவம் பார்த்து வந்த நபர் கைது! மெடிக்கல் ஷாப்புக்கு சீல்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மகன் வினோத் என்பவர் 12ஆம்வகுப்பு மட்டுமே முடித்து விட்டு குனிச்சி பகுதியில் செல்வி மெடிக்கல் என்ற பெயரில் மெடிக்கல் நடத்தி வந்துள்ளார் இந்த நிலையில் வினோத் இந்த மெடிக்கலுக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவமனை ஊரக நலப் பணிகள் இணைய இயக்குனர் கண்ணகி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டும் மெடிகளில் பரிசோதனை செய்ததில் எம்பிபிஎஸ் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஊசிகளை நோயாளிகளுக்கு செலுத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.மேலும் மருந்தாய்வாளர் சபரிநாதன் மெடிக்கலில் ஊசி போட பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் கைப்பற்றினார்.அதனைத் தொடர்ந்து மருத்துவமனை மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் கண்ணகி தலைமையில் மெடிக்கலுக்கு சீல் வைக்கப்பட்டது மேலும் கந்திலி போலீசருக்கு கொடுத்த புகாரின் பேரில் வினோத்தை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment