உதவி
திருச்சியை சேர்ந்த நரிக்குறவர் இன பெண்ணுக்கு கேன்சர் கட்டி அகற்ற திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு போதிய வசதி இல்லாததால் சென்னைக்கு வந்துள்ளனர். அங்கும் கைவிரித்த நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
நாடோடிகளான அவர்கள் ஒரு பெண்ணுக்காக 17 பேர் மொத்தமாக குடும்பமாக வேலூர் வந்து மருத்துவமனையில் சேர்த்து பின் தங்க சாப்பிட வசதியின்றி தவித்தனர்.
அவர்கள் தங்க இட வசதி செய்து கொடுத்தோம். ஆனால் பொது வெளியில் தங்கி கொள்வதாக சொல்லி உணவு மட்டும் கேட்டனர்.
எனவே 17 பேருக்கும் உணவு வாங்கி கொடுத்துவிட்டு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்ட பெண் நிச்சயம் மீண்டு வருவார் என நம்பிக்கை கொடுத்தோம்.
வந்தாரை நிச்சயம் வேலூர் கைவிடாது..!
Comments
Post a Comment